சசிகலா விவகாரம்: ஆற அமர யோசிக்கும் மாவை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜை திட்டமிட்டு அரசுடன் இணநை;து சுமந்திரன் தோற்கடித்தமையை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.அதிலும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரமுகர் க.அருந்தவபாலன்.

தென்மராட்சியில் கடந்த 3 தேர்தல்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறவில்லை. இம்முறை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் க.அருந்தவபாலன் நம்பிக்கையுடன் களமிறங்கினார். பின்னர் சசிகலா களமிறக்கப்பட்டார்.

அப்போது, அருந்தவபாலனின் வெற்றியை தடுத்து நிறுத்தவே சசிகலா களமிறக்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. பிரச்சார காலத்தில், சசிகலா கட்சியினால் வஞ்சிக்கப்படுவார் என்றும் அருந்தவபாலன் எதிர்வு கூறியிருந்தார்.

இந்த நிலையில் யாழ் மாவட்ட முடிவுகள் தொடர்பாக சசிகலா தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், நேற்று சசிகலாவின் வீடு தேடி சென்று ஆறுதல் கூறியுள்ளார் அருந்தவபாலன்.

ஏற்கனவே அனந்தி சசிதரன், சுதந்திரக்கட்சி பவதாரிணியென பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாவை சேனாதிராசாவோ இது கட்சி பிரச்சினை ஆற அமர யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


No comments