சுமந்திரன் தோற்கடிப்பார்: பதுங்கியிருந்த சிறீதரன்?

தான் சுமந்திரன் தரப்பால் தோற்கடிக்கப்படலாமென்ற அச்சத்தில் கிளிநொச்சி அலுவலகத்திலேளே பதுங்கியிருந்த சி.சிறீதரன் தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தான் முன்னணியில் நின்றிருந்த போதும் யாழ்ப்பாண நிலைவரம் சிறீதரனிற்கு தெரியாதே இருந்தது.அதிலும் கிளிநொச்சியில் ஏற்பட்ட எதிர்தரப்பிற்கான வாக்கு வங்கி அதிகரிப்பு நிச்சயம் தனக்கு பாதகமானதென புரிந்து கொண்ட போதும் யாழில் தன்னை தோற்கடிக்க சுமந்திரன் முற்படலாமென்பது அவருக்கு அச்சமாக இருந்தது.

இந்நிலையில் அவரது நெருங்கிய ஊடக வட்டாரங்கள் யாழிலுள்ள சில மூத்த ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்ட போது யாழில் பரவலாக சிறீதரன் முன்னிற்கு நிற்பதுடன் கிளிநொச்சி வாக்குகள் இணைந்தால் அவரே விருப்பு வாக்கில் முன்னிற்கு நிற்பார் என்பதை தெளிவுபடுத்தினார்.ஆனாலும் அதனை சி.சிறீதரன் நம்ப மறுத்து பதுங்கியிருந்தார்.பின்னர் தனக்கான விருப்பு வாக்கு தொடர்பில் உறுதிப்படுத்திய பின்னரே யாழ்ப்பாணம் வருகை தந்தார்.

அங்கு மீண்டும் சுமந்திரனிற்காக தனது குரலை இடையிடையே ஒலிக்க விட்டார்.

இதனிடையே இன்று அவர் விடுத்துள்ள குறிப்பில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தடம் மாறாத தமிழ்த்தேசியப்பாதையில் கடந்த பத்து ஆண்டுகளாக கொள்கைப்பற்றோடு நான் பயணித்து வந்திருக்கிறேன்.

எமது இருப்பைத் தக்க வைப்பதற்காகவும், இனத்தைப் பாதுகாப்பதற்காகவும் மக்கள் ஆணையோடு நான் கடந்து வந்திருக்கிற பாதை மிகக் கடுமையானது.

இந்தக் கரடுமுரடான பயணத்தில் என்னை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட சதிகள், சவால்கள், சரிவுகள், வீழ்ச்சிகள், துரோகங்கள் என அத்தனைக்கும் எதிராய் என்னை நிழிர்ந்தெழச் செய்த என் மக்களாகிய நீங்கள், தொடர்ந்தும் எம் விடுதலைப் பயணத்தை பலத்தோடும், உரத்தோடும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை வழங்கியதற்காக என் மனப்பூர்வமான நன்றிகளையும், அன்பையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


உங்கள் விடுதலைக்கான உரிமைக்குரலாய் நான் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்ற பெருவிருப்பின்பால் என்னை வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரினதும் உணர்வுகளோடு ஒன்றிக் கலந்த ஒருவனாய், எமது இனத்தினதும், எம் இனவிடுதலைக்காய் தம் இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களதும் சத்திய இலட்சியத்தின் வழி, தமிழ்த்தேசிய அரசியற்தளத்தை இனவிடுதலை நோக்கி, தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக பற்றுறுதி மிக்க தமிழ்த்தேசியப் பாதையில் என்றென்றைக்கும் தளராத துணிவோடு வழிநடாத்திச் செல்வேன் என உங்கள் வாக்குகளின் சாட்சியாக உறுதியெடுத்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


No comments