எல்லாமுமே தயார்!


நாளைய நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்களும்  89 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைந்துள்ளன.


வாக்கெண்ணும் நிலையங்களில்; 73 சாதாரண வாக்கு எண்ணும் நிலையங்களும் 16 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலுக்காக யாழ் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 571, 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 92264 பேரும் யாழ் மாவட்டத்தில் 479,584 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனதென யாழ்.தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாளை  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது.

அதேநேரம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மாலை 5 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைகிறது. 

வழமையாக நேரத்தை விட ஒரு மணி நேரம் வாக்களிப்பிற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன.
அவற்றில் 7,452  வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

அத்துடன் பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் உருவாக்கப்பட்ட 12 ஆயித்து 984 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

No comments