படைகள் வேண்டாம்:வலுக்கிறது கோரிக்கை!




தேர்தல் கடமைகளில் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை நீதியான தேர்தலிற்கு வழிகோலாதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்டவர்களிற்கு கடிதமொன்றை நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் தேர்தல் கடமைகளில் இராணுவத்திரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதனால் தேர்தல் முடியும் வரையில் அவர்கள் வீதிக்கு வரவேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியாவிற்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளபோதிலும் எதிர்வரும் 8ஆம் திகதியே இந்த இடமாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இடமாற்றம் பெற்றுச் செல்லும் வணீகசூரிய தொண்டர் படையணியின் தளபதியாக செல்லும் அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்ட புதிய தளபதியாக தற்போதைய கிழக்கு மாகாணத் தளபதி சேனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளார்.

No comments