விக்டோரியா மாநிலத்தில் விதிமுறைகளை மீறினால் 3,600 டாலர் அபராதம்!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கொரோனா நோய் தொற்றியவர்கள் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளை மீறினால், அவர்களுக்குச் சுமார் 3,600 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முடக்க நிலை விதிமுறைகளைக் கண்காணிக்க இராணுவத்தினர் பயன்படுத்தப்படவுள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் இரவு நேரம் மக்கள் நடமாடமுடியாத முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனாால் கொரோனா கிருமி தொற்றுள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வீட்டில் தங்கவில்லை என்று தெரியவந்துள்ளதாக விக்டோரியா மாநில முதலமைச்சர் டேனியல்
ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

அதனால் சமூக அளவில் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, புதிய கடுமையான தண்டனைகள் தேவைப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments