மண் திருட்டில் அதிரடிப்படை?


வடமராட்சி குடத்தனையில் மணல்; கடத்தலை தடுக்க நடுக்குடத்தனைப் பகுதியில் அதிரடிப்படை காவல் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதே அதிரடிப்படையினர் மணல் கடத்தலில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.

முன்னதாக மண்கடத்தலை தடுக்க குடத்தனை பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தை, அவ் அமைப்பின் அனுமதி பெறப்படாமல் மருதங்கேணி பிரதேச செயலர் அதிரடிப்படை தாரை வார்த்துள்ளார்.

அதனையடுத்து அதிரடிப்படை முகாமுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முகாம் ஆரம்ப பணிகள் இடம்பெற்றுவரும் அதே வேளை எதை தடுக்க முகாம் அமைகிறார்களோ அதனை, அதாவது மணலை அதிரடிப்படையினர் பக்கோ மூலம் அகழ்ந்து டிப்பர்களில் கடத்தும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இந்த மணலைப் பாதுகாக்க இப்பகுதி மக்கள், இளைஞர்கள் பெரும் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள்.இப்பகுதியில் மணல் கடத்தல் இடம்பெறுவதாக கூறி பாதுகாக்க வந்த அதிரடிப்படையினரே மணல்; கொள்ளையில் ஈடுபட்டுள்ளமையானது,அப்பகுதி மக்களின் மனங்களில் பெரும் அச்சத்திலும், விசனத்திலும் ஆழ்த்தியுள்ளது.

No comments