கைதிகள் உள்ளே:வெளியே அதிகாரிகளிற்கு பாதுகாப்பு!


பூஸா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு ஒன்றினால் மூன்று சிறைச்சாலை ஆணையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் ஆணையாளர் துசித உடுநுவர மற்றும் புலனாய்வு பிரிவின் உதவி ஆணையாளர் பிரசாத் பிரேமதிலக ஆகியவர்களுக்கு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பாதாள உலக கும்பல் சிறையிலிருக்க வெளியே இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

No comments