போராளிகளது கைதுகள் உள்நோக்கமுடையவை?


விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கமென்ற வகையில் வடக்கில் முன்னெடுக்கப்படும் கைதுகள் அரசியல் லாபம் கருதியவையே என தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் முக்கியஸ்தரான மகேந்திரன்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் முன்னாள் போராளிகள் அனைவரையும் ஜனநாயக வழியில் செயற்படுவதன் சதிகளினுள் சிக்காதிருக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

புரிந்தோ புரியாதோ எமது போராளிகள்; அரசியல் சதிகளிற்குள் மீண்டும் மீண்டும் அகப்பட்டுவருகின்றனர். 

தற்போதைய சூழலில் சிலருக்கு தென்னிலங்கையில் புலிகள் மீளெழுச்சி இருப்பதாக காண்பிக்க வேண்டிய தேவையிருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாகவே கைதுகள் அரங்கேற்றப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே கூட்டமைப்பிற்கென ஒதுக்கி வழங்கப்பட்ட 21கோடி நிதி மோசடி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அவ்வாறு  தனிநபர்களிடமிருந்து நிதி அனுப்பி வைக்கப்பட்டிருக்க சாத்தியமில்லையென தெரிவித்தார்.

தமிழரசு;ககட்சியின் கனடா கிளையில் நானும் முக்கிய பதவியிலிருந்தேன்.அவ்வாறு நிதி அனுப்பபடவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளது கட்டமைப்புக்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை புரிந்து சுயேட்சைக்குழுவாக கூடாரம் சின்னத்தில் போட்டியிடும் தமக்கு வாக்களிக்கவும் மகேந்திரன் கோரியிருந்தார்.  

No comments