விடுதலை ராசா: கோத்தா ஆட்சியில் விடுதலை!


2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் மூன்றாவது சந்தேகநபரான இமதுவகே இந்திக சம்பத் என்ற நபரை விடுதலை செய்ய நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோர் இந்த வழக்கில் ஏனைய சந்தேக நபர்களாவர்.

இன்று வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திக சம்பத் என்ற நபர் சிறைச்சாலை புலனாய்வு பிரிவில் சேவையாற்றியவர் என்றும் அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க கூடிய சாட்சிகள்  இல்லாத நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,  முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களான் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

No comments