வாயை மூடு: உயிரோடு இரு?


லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்து செய்தி எழுதிய பத்திரிகையாளர் சிஐடியினரால் விசாரணை செய்யப்பட்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது.


லசந்த விக்கிரமதுங்க கொலை குறித்து சிங்கள இணையத்தளத்தில் எழுதிய பத்திரிகையாளர் சிறிலால் பிரியந்த ஏன் சிஐடியினரால் விசாரிக்கப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பத்திரிகையாளர் சிறிலால் பிரியந்தவிற்கு எதிரான ஊடக ஒடுக்குமுiறையை கண்டிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையாளிகளை பாதுகாப்பதற்கான , உண்மைகள் வெளிவராமல் தடுப்பதற்கான முயற்சியாக இதனை பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

சிறிலால் பிரியந்த ஒரு துணிச்சலான பத்திரிகையாளர் அவர் லசந்தபடுகொலை தொடர்பான விசாரணைகள் எவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து எழுதிவந்துள்ளார் என அஜித்பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் ஏற்கனவே கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என குறிப்பிடடுள்ள அஜித் பெரேரா ஏன் அரசாங்கம் பத்திரிகையாளரை அச்சுறுத்த முயல்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments