மன்னார் அபிவிருத்திக் கூட்டம்!

மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி  தொடர்பான கூட்டம் இன்று 11.06.2020 காலை  10 மணியளவில் வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ்   அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட  செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அரசாங்க அதிபர் திரு C.A. மோகன்றாஸ், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர், மன்னார் மடு வலயங்களின் கல்வி பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு சார் உத்தியோகத்தர்கள், மாகாண கல்வி திணைக்களம் சார் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலகம் சார் உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட IAB.IC பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டை நோக்காகக் கொண்டு பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

- கல்வி அடைவு மேம்பாடு 
- பொதுப்பரிட்சை பெறுபேறுகளை             முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் 
- கல்வி செயற்பாடுகளில் எதிர்நோக்கப்படும் சவால்களும் அவற்றுக்கான  தீர்வுகளும்.
- கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை மற்றும் அதன் பின்னரான கல்வி செயட்படுகளை முன்னெடுத்தல்.
- O/L English booster course தொடர்பான அறிமுகமும்  அன்குராப்பனமும்.

இறுதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு சத்தியபாலன் அவர்களின் நன்றியுரையுடன் குறித்த நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments