ஜேர்மன் உதவியுடன் மட்டக்களப்பில் செயற்கைக் கால்கள் வழங்கல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்களினால் அவயவங்களை இழந்த மக்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது ஜெர்மன் நாட்டு உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தினூடாக அமுல் படுத்தப்படும் இத் திட்டத்தை ஜெர்மன் நாட்டின் ஜெர்மன் கூட்டுத்தாபன உதவித் திட்டத்தில் இந்த விஷேட திட்டத்தை தென் மாகாண தங்காலையை தலைமையாகக் கொண்டு செயற்படும் நவஜீவன அமைப்பு அமுல் நடத்தி வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வேண்டுகோளில் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணக்களத்தின் சிபாரிசில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்வாய்ப் பட்டு அவயவங்களை இழந்த மக்களுக்கு இன்று இலவசமாக செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சுமூக சேவை திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தர் நவஜீவன அமைப்பின் மாவட்ட தலைமையில் நடைபெற்ற இந்த விஷேட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சிறப்பதிதியாக கலந்து கொண்டு சுமார் அறுபத்து ஏழு பேரிற்கு எழுபத்து ஆறு செயற்கை அவயவங்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணிய மூர்த்தி, மாவட்ட சமூக வேவை உத்தியோகஸ்தர் திருமதி ச. கோணேஸ்வரன் கிழக்கு மாகாண சிரேஷ்ட சமூக உத்தியோகஸ்தர் எம். எம். அலியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விஸேட நிகழ்வில் முழங் கை, கால் கீழ் மற்றும் மேல் பகுதிககை இழந்தவர்களுக்கும் மற்றும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட சிறுபிள்ளைகளுக்கான பாதனிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த அவயவங்களை கெண்டி கெப்ற் நிலயம் தயாரித்து வழங்கியுள்ளது. ஜேர்மன் நாட்டின் கிறிஸ்ரப்ஸ் பிளைன் மிஷன் (ஊடீஆ) நிறுவனம் நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இலவச செயற்கை அவயவங்களை மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர், கோறளைப்பற்று மத்தி, ஆரயம்பதி, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, பிரதேசங்களில் அவயவங்களை இழந்த மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments