கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கினார் பிரஞ்சு அதிபர்!

பிரான்சில் கொரோனா தொற்று நோய் பரவலையடுத்து போடப்பட்ட கட்டுபாடுகள் பல நீக்குவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன்அறிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் தொலைக்காட்சியில் தோன்றிய மக்ரோன் மேலும் உரையாற்றுகையில்:-

கொரோனா வைரஸ் அனர்த்தத்திலிருந்து பிரான் முதலாவது வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார். எனினும் வைரஸ் மீண்டும் வரலாம் எச்சரிகையும் விடுத்துள்ளார்.

கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் பிரான்ஸ் முழுவதும் திறக்கலாம் அத்துடன் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படும். திங்கள்கிழமை முதல் பாரிஸ் பிராந்தியத்திலும் இது நடக்கும் என்று உறுதிப்படுத்தினார்.

குடும்பங்கள் தங்களது உறவினர்களையும், பராமரிப்பு இல்லங்களிலும் மூத்தவர்களைப் பார்வையிட முடியும்.

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் இன்று திங்களன்று நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை மீண்டும் திறக்கும்போது பயணங்களை மேற்கொள்ள முடியும்.

உயர்நிலைப் பள்ளிகளைத் தவிர அனைத்து பள்ளிகளும் ஜூன் 22 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் பிரான்சின் பல பகுதிகளில் உணவகங்கள், விடுதிகள் மற்றும் கஃபேக்கள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன.

No comments