கொரொனா வைத்தியசாலை வேண்டாம்?கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையினை கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் தன்னிச்சையான முடிவினை மாற்றி பொருத்தமான வைத்தியசாலை ஒன்றை தெரிவு செய்யுமாறும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் 20 க்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.அக்கராயன் வைத்தியசாலை அருகாமையில் மக்கள் செறிவாக வசித்துவரும் நிலையில் அங்கு கொரோனா நோயாளிகளை அனுமதிப்பது ஆபத்தானது எனத் தெரிவித்தெ பொதுஅமைப்புகள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments