சிங்களத்திடம் பருத்தித்துறையும் பறிபோகின்றது?


கொக்கிளாய்,முல்லைதீவு,வடமராட்சி கிழக்கென கால்பதித்து வந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று பருத்தித்துறை நகரில் கால்பதித்துள்ளனர்.பருத்தித்துறை நகரையண்டிய  கொட்டடி கடற்கரையில் கடல் அட்டை பிடிக்கும் தொழிலுக்காக தென்னிலங்கை மீனவர்கள் வருகை தந்துள்ளனர்.அவர்கள் இன்று காலை முதல் தமது தொழில் நடவடிக்கைகளை பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் இன்று பூசை நிகழ்வுகளுடன் ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே வடமராட்சி கிழக்கு குடாரப்பிலும் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கான முயற்சிகளில் சிங்கள மீனவர்கள் குதித்துள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

மக்களின் பொழுது போக்கு கடற்கரையாக காணப்பட்ட இடத்தில் நகரசபையின் எந்த அனுமதியும் இல்லாமல் கடற்கரையில் கூடாங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிடிக்கப்படும் கடலட்டைகளை அவிக்க ஏதுவாக பெரும் சூளைகள் அமைக்கப்பட்டு மலை போல எரிப்பதற்கான விறகு மட்டைகள் குவிக்கப்பட்டுமுள்ளது..

இதனிடையே நகரசபை தமக்குரிய அதிகாரத்தை ஏன் பயன்படுத்தவில்லை,மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் ஏன் வாய் மூடி மௌனமாகவுள்ளார் என கேள்விகள் எழுந்துள்ளன.

இதனிடையே இக்கடற்கரையினை அண்டியே துறைமுகம் மற்றும் பிரபல பாடசாலைகளான ஹாட்லிக்கல்லூரி மற்றும் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை என்பவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments