வாக்களிப்பு: ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16?


பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 04 நாட்களுக்கு நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
குறித்த தினங்கள் தவிர்ந்த மேலதிக தினங்களாக ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு நடைமுறை மற்றும் பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பான வழிகாட்டல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.
இதுவேளை பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுஅறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments