அக்கராயன் வைத்தியசாலை சுவீகரிப்பு:தேர்தல் நாடகமா?


ஒருபுறம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கொவிட்- 19 செயலணியின் உறுப்பினர்களும் இலங்கையில் கொவிட்- 19 இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்கள். மறுபுறம் கிளிநொச்சியின் அக்கராயன் வைத்தியசாலை பொதுமக்களின் பாவனையில் இருந்து நீக்கப்பட்டு அவசரமாக கொவிட்- 19 முகாமைத்துவ விசேட வைத்தியசாலையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறமை தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளார் முன்னணி சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்.


இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதன் கருத்து என்ன ? இவையெல்லாம் தேர்தலுக்கான சுத்துமாத்தா ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இலங்கை அரசினது எடுபிடியாக செயற்படுகின்றமை,படையினர் வசமிருந்த தனிமைப்படுத்தல் மையங்களது நிலை என்பவை தொடர்பில் கேள்வி எழுப்பியதையடுத்து யாழில் பணியாற்ற விசேடமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த முரளி வல்லிபுரநாதன் மீள கொழும்பிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை தெரிந்ததே.

No comments