யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்திலும் தனிமைப்படுத்தல்?


யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச்  சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த  இந்தியப் பிரஜை ஒருவர், இந்தியா திரும்பிய நிலையில், அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
குறித்த நபரை, யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்புக்கு, பஸ்ஸில் அழைத்துச் சென்ற இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும் குறித்த இந்தியப் பிரஜையுடன் தங்கியிருந்தபோது உயிரி​ழந்த மற்றுமோர் இந்தியப் பிரஜையின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் வழங்கும் பணியை மேற்கொண்டவருமே, இவ்வாறு  தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

No comments