சனிக்கிழமை முதல் இன்னொருவர் வீட்டில் தங்க முடியும்!

பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் ஒரு பகுதியாக தனியாக வாழுவோர் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரத்த உறவுகளின் வீட்டில் தங்க முடியும் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

நேற்றுப் புதன்கிழமை டவுனிங் ஸ்ட்ரீட் செய்தி மாநாட்டில் ஜோன்சன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

சனிக்கிழமை முதல் பெரியவர்கள் இன்னொரு வீட்டில் இரவைக் கழிக்க முடியும். இந்த மாற்றமானது தனிமையை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டது. இது வேறு நாடுகளில் வாழும் பிரித்தானியக் குடிமகனுக்குப் பொருந்தாது. 

அனைவருமே ஒரே வீட்டில் வசிப்பது போல் செயல்பட முடியும். அதாவது அவர்கள் ஒருவருக்கொருவர் வீடுகளுக்குள் ஒன்றாக நேரம் செலவிட முடியும். மேலும் இரண்டு மீட்டர் இடைவெளியில் இருக்க தேவையில்லை.

நீங்கள் ஒரு குடும்பத்துடன் இணைந்து இருக்கும் போது, இன்னொரு வீட்டுக்குச் செல்லவே அல்லது பல வீடுகளுக்குச் செல்லவோ முடியாது.

குடும்பத்துடன் இருக்கும் போது ஏதாவது வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் வீட்டில் இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தல் குறித்த ஆலோசனைகளைப் பெறவேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் குழந்தைகளின் பாடசாலைக்கு வெளியே இருப்பதால் பெரிய கோடைக்காலமாக இது இருக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் யூன் 15 ஆம் நாள் அத்தியாவசியமற்ற பொருள்கள் விற்பனை செய்யும் வணிக நிலையங்கள், வெளிப்புற உயிரியல் பூங்காக்கள், சஃபாரி பூங்காக்கள் மற்றும் டிரைவ்-இன் சினிமாக்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்று பிரதமர் உறுதிப்படுத்தினார்.

No comments