தமிழரசின் மதுபோதை அணிக்கு ஆப்பு!


தனது முகநூல் அணியினை நம்பி சுமந்திரன் பிரச்சாரத்திற்காக யாழ்.திரும்பியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள், வேட்பாளர்கள் தொடர்பில் முகநூலில் விமர்சிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட கிளைக்கூட்டத்தில்  இன்று (10) கூடி இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசு கட்சியின் முகநூல்; போராளிகள் அணியாக பிரிந்து நின்று மறு தரப்பு பிரமுகiர் அவதூறு செய்வதை பற்றி ஆராயப்பட்டிருந்தது.

தமிழ் அரசு கட்சி பிரமுகர்களை பற்றியோ, கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களை பற்றியோ கட்சியின் இளைஞரணியினர் யாராவது முகநூலில் பகிரங்கமாக அவதூறாக எழுதினால், அது குறித்து கட்சி தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக வாலிபர் முன்னணியில் இருந்தும், கட்சியிலிருந்தும் நீக்குவது என முடிவாகியதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

சிலர் இரவில் மது அருந்தி விட்டு, நிதானமிந்த நிலையில், தமிழ் அரசு கட்சியின் சில பிரமுகர்களை அவதூறு செய்து வருவது தொடர்பில் ஆராயப்பட்டு இந்த வகையானவர்கள் கட்டுக்குள் வராவிட்டால், அவர்கள் தமிழ் அரசு கட்சி சார்ந்தவர்கள் அல்ல, அவர்களிற்கும் கட்சிக்கும் தொடர்பில்லையென, பெயர் குறிப்பிட்டு அறிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரவணபவன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் கைத்தொலைபேசிகளை வழங்கி முகநூல் பிரச்சாரத்திற்கு ஆட்களை தயாராக வைத்துள்ள நிலையில் தடை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments