யாழ்ப்பாணத்திற்கு ஆபத்தில்லை!

ketheeswaran
யாழ்ப்பாணத்தின் இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 13 பொதுமக்களது பரிசோதனை ஆய்வறிக்கைகளின் முடிவின் படி, அவர்களுக்கு கொரோனாத் தொற்றுக்கான எந்த அறிகுறியுமில்லையென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இணுவிலில் இருந்து இந்தியா சென்ற இந்திய புடவை வியாபார ஒருவருக்கு அண்மையயில் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் முன்னாயத்த நடவடிக்கையாக இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இணுவிலில் இருந்து தமிழகம் சென்றிருந்த இந்திய வர்த்தகரிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியிருந்தது.

இதனை தொடர்ந்து அவர் தங்கியிருந்த இணுவில் மற்றும் ஏழாலையை பகுதியைச் சேர்ந்த 13 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே அவர்கள் 13 பேருடைய மாதிரிகள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்து இந்திய புடவை வியாபாரியே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், இணுவில், ஏழாலை பகுதிகளில் சில வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் திரும்பியவருக்கு கொரோனா தொற்றுள்ளதாக வெளியான தகவலை யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவரும்;; உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments