பாடசாலைகளிற்கு முன் பூங்காக்களும் திறப்பு!


பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களையும் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கொவிட் 19 பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல், நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களையம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments