ஜேர்மனியில் படைக் குறைப்பு! 9500 அமொிக்கப் படையினர் வெளியேற்றம்!

US Troops withdraw from Germany
ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்கப் படைகளில் 9500 பேரை அங்கிருந்து அகற்றுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் 34,500 அமொிக்கப் படையினர் தங்கியிருக்கிறார்கள். இதில் 9,500 பேர் அந்நாட்டிலிருது போலந்து, பிற நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கும் அனுப்பப்படவுள்ளனர். இதன் அடிப்படையில் யேர்மனியில் உள்ள அமொிக்கப் படையினரின் எண்ணிக்கை 25,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், கூட்டுத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் மார்க் மில்லியின் பல மாத கால உழைப்பின் விளைவே இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஏஞ்சலா மேர்க்கலுக்கும் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்புக்கும் எட்டாப் பொருத்தம். பாதுகாப்புப் படையினரின் செலவீனங்களை உயர்த்துமாறு டிரம்ப் ஜேர்மனிக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இந்த மாதம் ஜி7 நாடுகளின் மாநாட்டை டிரம்ப் நடத்தத் திட்டமிட்டிருந்தபோது அதை மேர்க்கல் முடியடித்திருந்தார். ரஷ்யாவில் ஜேர்மனி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார் டிரம்ப்.

படைகளில் குறைப்பு முடிவானத இந்த முரண்பாட்டிலிருந்து எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பேர்லினுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளின் சமீபத்திய திருப்பமாகும் என நம்பப்படுகிறது.

No comments