துணியால் அமைந்த சுவாசக் கவசங்களை அணியுங்கள் - உ.சு.அ

Mask
கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் சுவாசக் கவசங்களை அணிவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் சுவாசக் கவசங்கள் அணிவதால் நோய்க்கிருமி நீர்த்துளிகளாக சென்றடைவதைத் இது தடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே உலகில் சுவாசக் கவசங்கள் அணிய வேண்டும் என நாடுகள் பரித்துரை செய்துள்ளன. சில நாடுகள் அதை கட்டாயமாக்கியுள்ளன.

ஆரோக்கியமான மக்கள் சுவாசக் கவசங்களை அணி வேண்டும் என்பதற்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என உலக சுகாதார அமைப்பு முன்பு வாதிட்டது. தற்போது அந்த நிலையிலிருந்து மாறி அனைவரும் சுவாசக் கவசங்கள் அணிய வேண்டும் என அந்த நிறுவனம் கோரியுள்ளது.

கோவிட்-19 பற்றிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப முன்னணி நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்:- 

ஆரோக்கியமானவர்கள் மருத்துவமற்ற துணியால் அமைந்த சுவாசக் கவசங்களை அணிவது நல்லது. அத்துடன் நோயாளர்களைப் பாராமரிப்போர் அல்லது கவனிப்போர் மருத்துவ சுவாசக் கவசங்களை அணிய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். 

No comments