இலங்க: 2000 இனை தாண்டியது?

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது நேற்றைய தினம் (24) 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக இன்று (25) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பேருந்து சாரதி நடத்துனர்கள் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இணைந்து திடீர் சேதனையில் ஈடுபட்டனர். இதன்போது பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

No comments