கருணாவை கைது! மனுத்தாக்கல்!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை, கைதுசெய்யக்கோரி கடுவல நகர சபை உறுப்பினர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆனையிறவுத் தாக்குதலின் போது 2000 - 3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக  நாவிதன்வெளி பிரசேத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருணா அம்மான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில், பல எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையிலே,  கருணா அம்மானை கைதுசெய்யக்கோரி கடுவல நகர சபை உறுப்பினர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கருணாவைக் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments