முன்னரங்கில் 22ஆயிரம் வெடிபொருட்கள்?


போர் நடந்த பிரதேசங்களிலிருந்து கண்ணிவெடியகற்றல் பணிகள் தொடர்கின்றன.

இதன் பிரகாரம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம், தச்சடம்பன் ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை, ஆனையிறவு ஆகிய பகுதிகளிலும், பதினொரு இலட்சத்து ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்கு (1,101,954) சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து, இருபத்திரண்டாயிரத்து இருநூற்று அறுபது (22,260) அபாயகரமான வெடிபொருள்களை அகற்றப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மனிதநேய கண்ணிவெடியகற்றல் பணியில் ஈடுபட்டுள்ள, ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ இதனை தெரிவித்துள்ளார்.

No comments