தேர்தல் ஓகஸ்ட்-5


எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்-05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது குறித்த அறிவித்தலினை இன்று(10) வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதன் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகும்.

இதேவேளை, வேட்பாளர்களின் விருப்ப எண் வர்த்தமானி மூலம் நேற்று அறிவிககப்பட்ட நிலையில் பரப்புரைகளை ஆரம்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments