தீவகம்:கடற்படையால் முற்றுகைக்குள்?


கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனலைதீவிற்கு காலை இலங்கை காவல்துறை சென்றுள்ளது.

கடற்படையினர் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்களை தேடி முடக்கப்பட்டுள்ள அனலைதீவிலிருந்து மக்களை நேற்று முதல் வெளியேறவிடாது கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை விசாரணைகளை  நடத்த ஏதுவாக இலங்கை காவல்துறை சென்றுள்ள போதும் பொதுமக்கள் கைதானமை தொடர்பாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதனிடையே விசா முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருந்த இந்தியா பிரஜைகள் 8 பேர் குறிகட்டுவான் பகுதியில் கைது  செய்யப்பட்டார்கள். இந்த இந்தியப் பிரஜைகள் நெடுந்தீவு பகுதியில் தங்கி நின்று பணிபுரிவதாக கடற்படையினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கடற்படையினர் அவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஊர்காவற்துறை போலீஸ் ஊடாக முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

No comments