கதிரை-அல்லாடும் புலம்பெயர் முதலாளிகள்:நாறும் அரசியல்!



வடக்கில் அரசியலை முன்னைய உதயன் பாணியில் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க தாயக மற்றும் புலம்பெயர் ஊடக நிறுவனங்கள் தலையால் நடக்க தொடங்கியுள்ளன.

லைக்கா இயக்குனர் அல்லிராஜா சுபாஸ்கரன் முதல் ஐபிசி இயக்குனர் பாஸ்கரன் வரை வேட்பாளர்களை தமது சட்டைப்பைகளுள் வைத்தவாறு வெற்றிக்காக அலைந்து திரிகின்றனர்.ஆளாளுக்கு காசு பணமென அள்ளிவீசிவிட்டுவரும் பட்டியல் நீள்கிறது. 

இவர்களை விட உள்ளுரில் உதயன் நாளிதழ் நிர்வாகியான சரவணபவன் மீண்டும் கதிரைக்கனவுடன் களமிறங்கியுள்ளார்.

லைக்கா உரிமையாளர் தனது பினாமி வேட்பாளர் குருசாமிக்கு கோடிகளில் அள்ளிக்கொடுத்து சசிகலா ரவிராஜ்ஜினை வெல்ல வைக்க ஆலாய் பறக்கின்றார்.எனினும் அள்ளிக்கொடுப்பதை குருசாமி பதுக்கிக்கொண்டு கிள்ளி வழங்குவதாக ஊடகப்பரப்பில் பேசப்படுகின்றது.

இதனிடையே தனது ஒருவன் பத்திரிகையை சசிகலா மற்றும் குருசாமி பிரச்சார பீரங்கியாக மாற்ற அல்லிராஜா முற்பட்ட தனது எசமான் சுமந்திரன் தவிர்ந்த எவருக்கும் கவி பாடமாட்டேனென வித்தியாதரன் கோபித்துக்கொண்டு விட்டுவிட்டு போனமை புதிய கதை.

அவருக்கு அடுத்து வரும் யாழ்.மாநகரசபை முதல்வர் கதிரைக்கனவு உறண்டுகின்றது.   

இன்னொரு புறம்  கோத்தபாய பினாமியான டான் குழும தலைவர் சிங்கள நிகழ்ச்சி நிரலில் பணி புரிய மீண்டும் தொடங்கியுள்ளனர். கோத்தபாய நாட்டைவிட்டு தப்பித்தோடி விட்டாலும் போதும் பினாமியாக சொத்தை பாதுகாக்கஆளாளுக்கு மும்முரமாகியுள்ளனர். ஏற்கனவே வரித்துக்கொண்ட தனது வடமாகாண முதலமைச்சர் கனவை இன்னமும் தன் வசம் வைத்திருக்கின்ற குகநாதன் ஒரு ஒரு ஜயர் வருகிறார் பாணியில் யதீந்திரா எனும் நபரை வைத்து நடத்திய சிவில் சமூக நாடகம் பிரபலமானது.எனினும் தனது இலக்கான காரினை அண்மையில் இந்திய தூதரக நிதியில் பெற்றுக்கொண்ட யதீந்திரா பின்னர் பொது ஜனாதிபதி வேட்பாளர்  திட்டத்தில் புலம்பெயர் நிதியை மனைவி வங்கிக்கணக்கில் வாங்கி மூக்குடைபட்டிருந்தமை சங்கினுள் புகைந்த வண்ணமிருக்கின்றது.

அதேபோல் கடந்த காலங்களில் அங்கஜன் இராமநாதனை வெல்ல வைத்த பெருமை சிறிய தந்தையான கப்பிட்டல் இயக்குனரையே சாரும். அதே இயக்குனரின் மகன் போதைப்பொருளை கடத்திய வேளை அகப்பட்ட தருணம் அதை காப்பாற்றியவராக அங்கஜன் இராமநாதன் இருந்திருந்தார்.எனினும் குடும்ப சண்டையால் அங்கயன் தற்போது அநாதரவாகிபோயுள்ளார்.

இவை இவ்வாறிருக்க தமிழரசில் ஆசனம் வழங்கப்படாமையால் கட்சியிலிருந்து வெளியேறிய கே.வி.தவராசா அண்மையில் ஜனநாயகத் தமிழரசு  கூட்டமைப்பை ஆரம்பித்து மாம்பழ சின்னத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சகிதம் தேர்தில் களமிறங்குகின்றனர்.இந்த கூட்டின் செயலாளராக காணப்படும் அகிலன் முத்துகுமார் கூட சுதந்திரன் பத்திரிகை நிர்வாக இயக்குனராக இருந்து அந்த பத்திரிகையை முற்றுமுழுதாக தனது அரசியல் விளம்பரத்துக்கு உபயோகித்து வருகிறார்.ஏற்கனவே யாருமே வாசிக்காத தனது பத்திரிகை;கு விளம்பரக்கட்டணமாக ஒருகோடியை சஜித்திடம் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற பெருமை அகிலனிற்கே உள்ளது

இந் நிலையில் தமிழரசு முன்னாள் இளைஞரணி முக்கியஸ்தர் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் சமூகம் ஊடகத்தின் இலட்சினை  பொறிக்கப்பட்ட குடையை தவராசாவிற்கு பிடிக்கும் போது எடுத்த படமொன்றை சமூக ஊடக பதிவொன்று கசியவிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர் என்ற போர்வைக்குள் ஊடகங்களை இயக்குவோர் பணத்தை அள்ளி வீசி இதுபோன்ற கட்சிகளை உடைக்கும் செயற்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்கின்றது.

லைக்கா நிறுவனம் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரிற்கு 9கோடியை குருசாமி சுரேந்திரனிடம் அள்ளி வழங்கியிருந்த போதும் அவர் ஒரு சிறுதொகையை கிள்ளி வழங்கிவிட்டு பெருந்தொகையுடன் கமுக்கமான சர்ச்சை தொடர்கின்றது.

இம்முறையும் சுமார் 25கோடி வரை நாடாளுமன்ற தேர்தலிற்காக   வந்திருப்பதாக கூறப்படும் நிலையில் குருசாமி சுரேந்திரன் கணக்கு காண்பிப்பதாக பங்காளிகள் புறுபுறுத்தவண்ணமுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பென தனது அல்லக்கைகள் சிலரை அழைத்து ஆட்களிற்கு இலட்சக்கணக்கில் வழங்கி வெளியே கணக்கு காண்பிப்பது சங்கிற்குள் புகைச்சலை தந்துள்ளது. 

இதேவேளை முன்னணியோ முகநூல் படையணி பலரும் தற்போது மணி அணியோடு தப்பித்து ஓடிவிட கோத்தா தொலைக்காட்சிக்கும் காவடியெடுக்கின்ற நிலை தோன்றியிருக்கின்றது.அதிலும் கட்சியின் செயலாளர் நாயகமோ புலன்பெயர் காசு போதியளவில் வராமைக்கு ஊடகவியலாளர்களை திட்டுவதை விட்டபாடாக இல்லை.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் மற்றும் சஜித் என ஏற்கனவே வருமானம் பார்த்திருந்த சுமந்திரனோ தனது வெற்றிக்காக அள்ளிவீசிவருகின்றார்.அடுத்து யாழ்.மாநகரசபையில் முதல்வர் பதவியையாயினும் பெற்றுவிடுவேன் என ஓய்வு காலத்தில் புலம்பும் வித்தி போன்றோர் மட்டும் தற்போதும் சுமந்திரனின் புகழ்பாடும் வீரர்களாவவுள்ளனர்.

மறுபுறம் குடும்ப ஊடகங்கள் இல்லாத நிலையில் சிவஞானம் சிறீதரன் ஜபிசி போன்றவற்றிடம் சரணாகதியடைந்துள்ளார். 

ஒரு சீற் அமைச்சரான டக்ளஸ் உள்ளிட்ட பலரது கதிரைக்கனவுகள் இம்முறை ஆட்டங்கண்டுள்ளது.அதனால் யோகேஸ்வரி பற்குணம் முதல் பலரை கைவிட்டு வெளியாட்களை கொண்டு தனது வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளார் டக்ளஸ்.

மறுபுறம் வகைதொகையின்றி களமிறங்கியுள்ள சுயேட்சைகளோ நமக்குநாமே பாணியில் முகநூல் பிரச்சாரங்களை மட்டும் நம்பி முடுக்கிவிட்டுள்ளன.

சமூகத்திற்கு நடுநிலைத்.தன்மையை வெளிக்காட்டும் ஊடகங்கள் நெறிதவறி நடக்கையில் யாழ்.ஊடக அமையம் போன்ற ஊடக கட்டமைப்புக்கள் என்ன செய்கின்றவென்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.


No comments