இலங்கை திரும்புவது எப்படி?


இலங்கை வருவது எப்படியென முன்னணி கப்பல் நிறுவன அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட தமிழர்கள் வெளியே சிக்குண்டுள்ள நிலையில் தனது இலங்கைக்கு திரும்புதல் அனுபவத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


தற்போது தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் வைக்கப்பட்டுள்ள அவர் கொரோனா தொற்று இல்லையெனினும் மேலும் 14 நாட்கள் தனது வீட்டிலும் தனிமைப்படுத்தப்படுவார் என அறிவித்துள்ளார்.
"ஒருவாறு கடவுளின் கிருபையாலும் Ceyline இன் முயற்சியாலும் இறுதியாக நாட்டுக்கு திரும்பிவிட்டேன். ‘பணி ஒப்பந்தம்’ முடிந்த பின்னரும் கப்பலில் இறங்க முடியாமல் தொடர்ந்து மன உளைச்சலுடன் பணி புரியும் சக மாலுமிகளுக்காக இறைவனை பிராத்திக்கின்றேன்.
COVID 19 ஐத் தொடர்ந்து இலங்கை வருபவர்களுக்கு குறிப்பாக மாலுமிகளுக்கு நாட்டுக்கு வருவது தொடர்பான விபரங்களை பெறுவது மிகவும் கடினமாகவும் சிக்கலாகவும் உள்ளது. நான் இலங்கை வருவரை எனக்கும் இப்படி ஒரு நிலைதான்.

கொரொனாவின் வீரியம், சொந்த நாடு, கப்பலால் இறங்கும் நாடு, விமானம் மாறும் நாடுகள், விமான நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள் என முடிச்சு அவிழக்க கஷ்டமான ஏராளமான சிக்கல்கள்.
ஆகவே இலங்கை வரவுள்ளவர்களுக்கு குறிப்பாக சக மாலுமிகளுக்கு ஒரு தெளிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, தற்பொழுது உள்ள நடைமுறையை கீழே விபரித்துள்ளேன்.

1) இலங்கைக்கு Inbound Flights ஆரம்பிக்க வில்லை. பிரத்தியேக சேவை மட்டும்தான் இடம்பெறுகிறது. அதுவும் தேவையை பொறுத்து. நான் வந்த விமானம் ஜப்பானுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் வந்து, பின் திரும்பும் போது நான் உட்பட 3 பயணிகள் தான்.
2) ஆகவே கப்பலால் இறங்கும் நாட்டிலிருந்து ஏதாவது விமான சேவை உள்ளதா என்பதை அறிய வேண்டும். அல்லது Transit வழி வேறு ஏதும் நாடுகள் மூலம். (நான் கொரியாவில் இறங்கி ஜப்பான் வழி வந்தேன்).
3) Google search வழி விமான சேவையை பார்க்க வேண்டாம். அங்கு காட்டப் படுபவை எல்லாம் ‘டம்மி’ தான். சில நாட்கள் முன்பு வைரசாக பரவிய பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை அட்டவணையையும் நம்ப வேண்டாம்.
4) இலங்கை வரும் சகலரும் இலங்கை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். (Online Registration). சம்பந்தப்பட்டவர்கள் செய்ய வேண்டும். (எனக்கு எனது கப்பல் நிறுவனம் மேற்கொண்டது).
5) குறித்த Online Registration இல் இலங்கை வரும் போது PCR சோதனை செய்து கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளதாக இன்னொரு மாலுமி கூறினார். ஆனால் அப்படி அது கட்டாயம் போல் தெரியவில்லை. நான் கொண்டு வரவில்லை. இங்கு வரும் போது சகலருக்கும் PCR சோதனை செய்யப்படுகிறது. ஆனாலும் Form நிரப்பும் போது, கப்பலால் இறங்கும் பொழுது கொடுக்கப்படும் ‘Quarantine certificate’ ஐ இணைப்பது நல்லது.
6) நாளுக்கு நாள் ஒவ்வொரு நாட்டினதும் விதிகள் மாறிக் கொண்டிருக்கிறது. கொரியாவில் விமான நிலையத்தில் ‘எங்கு போகிறாய்’ என்று கேட்க, ‘Tokyo வழி இலங்கை’ என்று கூற Tokyo மற்றும் இலங்கை தற்பொழுது விதித்துள்ள விதிமுறைகளை PC இல் பார்த்த பின்னர் தான் அனுமதி. ஆகவே பிந்தைய விதிமுறைகளை அறிந்து பின்பற்றவேண்டும். ஏனெனில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை என்றால் சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்கள் என்று காத்திருக்க வேண்டி வரும். அவ்வாறு பலர் இன்னும் காத்திருக்கிறார்கள்.

கொழும்பு வந்த பொழுது
நாம் அணிந்து வரும் முக உறை, கையுறை போன்றவற்றை மாற்றி, கை கால் பை போன்றவற்றுக்கு மருந்து தெளித்து, புதிய முக உறை கை உறை தருகிறார்கள்.
இரண்டு இடங்களில் மருந்து தெளிப்பு , மூன்று இடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை.
பி‌சி‌ஆர் சோதனையும் விமான நிலையத்திலேயே இடம்பெறுகிறது. தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை.
எமது விபரங்களை பூரணப் படுத்தி கொடுக்க வேண்டும்.
சாப்பாட்டு பொதியும் நீரும் கொடுக்கிறார்கள்.
எல்லாம் முடிந்த பின்னர் ‘Paid Quarantine’ அல்லது ‘Government free Quarantine’ போக விரும்புகிறீர்கள் எனக் கேட்கிறார்கள்.
‘Paid Quarantine’ விபரம் எழுத்தில் போடப்பட்டுள்ளது.
Single - 12,500/-
Double - 18,000/-
Triple - 25,000/-
விமானப் பணிப் பெண் ஒருவருடன் கதைத்த பொழுது, ‘Government free Quarantine’ இலேயே தங்காலம். அவை தேவையான தரத்தில் தான் உள்ளன எனக் கூறினார். அயல் நாட்டு Government free Quarantine உடன் ஒப்பிட முடியாதளவுக்கு இங்கு தரம் சிறந்தது என்பது உண்மை.
தெரிவு முடிந்து பஸ் நிரம்பியவுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ‘பாதுகாப்புடன்’ பயணம்.
பஸ்ஸால் இறங்க மீண்டும் மருந்து தெளிப்பு, உடல் வெப்பநிலை பரிசோதனை, தகவல் திரட்டல்.
இப்பொழுது அறைக்குள் – 14 days strict Quarantine.. வெளியில் போக முடியாது. இரண்டு தடவை உடல் வெப்பநிலை பரிசோதனை.
குறித்த பணிகளை படையினரே செய்கின்றனர். கப்பலில் நாங்களும் COVID 19 க்கு எதிராக பல ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாலும், சில நாடுகள், சில விமான நிலயங்களில் அவதானித்ததை ஒப்பிடும் போது, இங்கு மிகச் சிறப்பாகவே கொரொனாவுக்கு எதிராக பாடு படுவது தெரிகிறது. கொரொனா 2 ஆவது அலைக்கு இங்கு சாத்தியம் மிகக் குறைவு என்பது தெளிவாகத் தெரிகிறது".

No comments