மத தலைவர்கள் ஆசீர்வாதத்துடன் அங்கயன்!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவரது தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களும்; தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை தொடங்குவதற்கு முன்னாதாக சர்வமதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெறும் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

கீரிமலை மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு உமாபதிசிவம் அடிகளார்,தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்த அங்கஜன் இராமநாதனும் அவரது கட்சி வேட்பாளர்களும் அவரிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார் அதனை தொடர்ந்து யாழ் நாக விகாரை விகாராதிபதி ஹொங்கல்ல கிரித்தம்ம தேரர் அவர்களையும் சந்தித்து ஆசிகளைபெற்றுகொண்டனர். அதனை தொடர்ந்து முகமதியா ஜும்மா பள்ளிவாசல் தலைமை தலைவர்  முதீன், முகமதியா ஜும்மா பள்ளிவாசல் தலைமை மௌலவி முகமது றிபா(க)ய் மஹ்மூத் (நூறி) அவர்களையும் சந்தித்து ஆசியை வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார். 

No comments