இங்கிலாந்தில் செப்டம்பரில் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆண்டு பள்ளி மாணவர்களும் செப்டம்பர் மாதத்தில் முழுநேர பள்ளிக்குச் செல்வார்கள் என்று கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பில் நடைபெறும் நாளாந்த சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் அடுத்த பதினைந்து நாட்களில் வெளியிடப்படும்.

பாடசாலை வகுப்பு அறையில் மாணவர்களின் எண்ணிக்கை அளவு வரையறுக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளைப் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்க முடியும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது விதிக்கப்பட்டுள்ள தற்போதைய விதிகளின் கீழ் ஒரு வகுப்பில் அதிகபட்சம் 15 மாணவர்களாக கற்கையைத் தொடரமுடியும்.

வகுப்பு அளவுகள் இங்கிலாந்தில் வேறுபடுகின்றன, ஆனால் இது சுமார் 30 மாணவர்களாக இருக்கலாம் என்றார்.

இங்கிலாந்தின் மாணவர்கள் கற்றலைப் படிக்க உதவும் வகையில் பிரதமர் 1 பில்லியன் பவுண்கள் நிதியை அறிவித்திருந்தார்.

No comments