விடுதலைச் சிறுத்தைகள் உதவி?


யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் உள்ள முகாம்களில் நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு அன்றாடக் கூலிகளாக வேலை செய்துவருகிறார்கள். கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக தினக்கூலிகளான இவர்கள் வேலை இழந்து அன்றாட ஜீவனோபாயத்திற்கே அல்லாடி வருகின்றனர். 

இதனைக் கருத்திற்கொண்டு, தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனின் வழிகாட்டுதலுக்கு அமைவாக முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உலர்உணவுப் பொதிகளை நிவாரணமாக வழங்கிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று (20.05.2020) கும்மிடிப் பூண்டியிலுள்ள ஈழ ஏதிலிகள் முகாமுக்குச் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்துள்ளனர்.  

No comments