ஹூல் தனிமைப்படுத்தல்:செய்திகள் பொய்?


பேராசிரியர் ஹூல் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் சில தேசிய பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ள செய்திகள் போலியானவை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


தனது மகள் முறையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.பேராசியர் ஹூலின் மகள் முறையாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதை தாமும் உறுதி செய்வதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, பேராசிரியருக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் போராடியதாகவும் அவரை பலவந்தமாக தேர்தல்கள் காரியாலயத்திலிருந்து வெளியேற்றியதாகவும் வெளியான செய்திகளில் உண்மையில்லை எனவும் தெரிவித்தார்.

No comments