விமானப்படை மோதி மரணம்?


விமானப்படை அம்புலன்ஸ் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி – பளை, தம்பகாமம் ஏ-9 சந்தியில் குடும்பஸ்தரும் அவருடைய மனைவியும் மோட்டார் சைக்கிளில் வந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஏ-9 வீதியில் பயணித்த அம்புலன்ஸ் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில் 55 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

No comments