கொரோனாவுக்கு பலியான வாழைச்சேனை பெண்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய, மட்டக்களப்பு - வாழைச்சேனையை பிறப்பிடமாகவும், லண்டனின் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட தாதி உத்தியோகத்தரான மிஹ்ராஜியா முஹைதீன் (வயது 56) என்ற பெண் மரணமடைந்துள்ளார்.

கிழக்கு லண்டன் நியூஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் தாதி உத்தியோகத்தராக கடையாற்றி இவர் கொரோனா வைரஸ் காரணமாக லண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை லண்டனில் மரணமடைந்துள்ளார்.

இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளைகளுமாக மூன்று பிள்ளைகளின் தாயான மிஹ்ராஜியா முஹைதீன் 1990ம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வந்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக அவருடன் இருந்த கணவர் மற்றும் இளைய மகள் ஆகியோர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments