இந்திய இராணுவம் வருமா? வராதா? உண்மை தகவல் இதோ!

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளது என்று இந்திய ஊடகங்கள் நேற்று (21) செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நட்பு ரீதியாக இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தமது இராணுவத்தை இந்தியா அனுப்ப உள்ளது என்றே இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

No comments