கோப்பாயினை தொடர்ந்து முல்லையிலும் எதிர்ப்பு?



பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்த போவதில்லையென இலங்கை அரசு ஒருபுறம் கூறியவாறு மறுபுறம் வடக்கில் பாடசாலைகளை  கையகப்படுத்துவதில் மும்முரமாகியுள்ளது.

இந்நிலையில் முல்லைதீவு மாவட்டத்தின் வற்றாப்பளை மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு சில பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக முத்தையன்கட்டு இடது முகரை அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, முத்தையன்கட்டு வலது கரை மகாவித்தியாலயம், அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம், விசுவமடு பாரதி வித்தியாலயம், இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கூழாமுறிப்பு பாடசாலை, தண்டுவான் அ.த.க. பாடசாலை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இன்று செவ்வாயிக்கிழமை முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையில் தளபாடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்களின் ஆவணங்கள் அடங்கிய அலுமாரி இராணுவத்தால் எடுத்துச்செல்லப்பட்டு அயலில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கோப்பாய் கல்வியியல் கல்லூரியினை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்களது எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. 

No comments