ஈபிடிபி உறுப்பினரை சிறிடெலோவினர் தாக்கியதாக முறைப்பாடு
வ‌வுனியா தெற்கு தமிழ் பிர‌தேச‌ ச‌பையின் ஈ.பி.டி.பி உறுப்பினரான தன்னை மதுபோதையில் வீட்டிற்கு வந்த சிறீடெலோ உறுப்பின‌ர்கள் தாக்கியதாக பிரதேச சபை உறுப்பினர் துஸ்யந்தன் 
விக்டர் ராஜ் என்பவரை மதுபோதையில் சென்ற தெரிவித்துள்ளார்.
இன்று (19.4) மாலை உக்கிளாங்குளத்தில் உள்ள ஈ.பி.டி.பி யின் தமிழ் தெற்கு பிரதேசசபை உறுப்பினரான துஸ்யந்தனின் வீட்டிற்கு சென்ற மற்றுமொறு பபிரதேசசபை உறுப்பினரான சிறிடெலோ கட்சியின் முக்கியஸ்தரான அதிஸ்டசெல்வ‌ம் அவ‌ர்க‌ளின் இர‌ண்டு ம‌க‌ன் உட்ப‌ட‌ சிறீடெலோ இளைஞ‌ர் அணியின‌ர் வீடு புகுந்து தாக்கியதாக தொவிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் துஸ்யந்தன் விக்டர் ராஜ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடுர்பில் துஸ்யந்தன் விக்டர் ராஜ் கருத்து தெரிவிக்கையில்,
அருட்செல்வம் ஒப்பந்தங்களi செய்து வருவதாகவும் அதில் ஏற்படும் ஊழல் தொடர்பில் தான் சுட்டிக்காட்டி ஒப்பந்தங்களை சமூக அமைப்புக்கள் ஊடாகவே வழங்க வேண்டும் என தெரிவித்து வருவதனாலேயே தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் பெண்கள் மறறும் வர்த்தகர்களை போல் முகநூல்களில் அசங்கமாக சித்திரித்து வருபவர்கள் என தொவித்ததுடுன் தனது குடும்ப பெண்கள் தொடுர்பாகவும் அவர்கள் போலி முகநூல்களில் எழுதியிருந்தவர்கள் எனவும் தெரிவித்தார்,
இதேவேளை சிறிடெலோ கட்சியினர் தனது வாகனம் மீதும் அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தனர் எனவும் தெரிவித்தார்.

No comments