உலகமெங்கும் 86 அணிகள் தடுப்பூசி பணியில் தீவிரம்; அவசரம் வேண்டாமென்கிறார்கள் நிபுணர்கள்!

கொரோன வைரஸிலிருந்து பாதுகாக்க உலகெங்கிலும்  நாடுகள் சமூக இடைவெளிகளையும் முடக்கங்களையுமே கடைப்பிடிக்கின்றன, நமக்குத் தெரிந்தபடி வைரஸ் பரம்பலை தடுக்க ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதுதடுப்பூசியோ தடுப்பு மருந்தே;

இங்கிலாந்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகரான சர் பேட்ரிக் வலன்ஸ் இந்த வாரம் கூறியது போல்
, தடுப்பூசிகள்தான்  இந்த உலகளாவிய நெருக்கடியின் கடைசி“வழி”.

உலகெங்கிலும் 86 அணிகள் SARS-CoV-2 வைரஸை அழிப்பதற்க்கான தடுப்பூசி தயாரிக்கும் வேளைகளில் வைரஸைஎதிர்த்துப் போராடுகின்றன, இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் திட்டத்துடன் செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு மில்லியன் அளவு தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறது.

ஏறக்குறைய 200 நாடுகளில் மில்லியன் கணக்கான மனிதர்களிடையே தொற்று  உள்ள நிலையில், இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுபவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசி கண்டுபிடிப்பாளர்கள்  வெற்றிபெற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை நெருக்கடிக்கு ஒரு தீர்வை உருவாக்குவதற்கான அவசரத்தில் இருந்து பாதுகாப்பு ஆபத்துகளும் உள்ளன. அதாவது ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்புக்களில் கிட்டத்தட்ட  100,000  மனித உயிர்கள் பலியாகக்கூடும் எனவே தற்போதைய நிலையில் உலகத்தால் இப்படியான இழப்புக்களை தாங்க முடியாத நேரம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments