யாழில் 50 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

யாழ்ப்பாணத்தில் 50 பேரிடம் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணம் மாநகர சுகாதார அதிகாரி பிரிவை சேர்ந்த 30 பேர், கிளிநொச்சியை சேர்ந்த 11 பேர், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 5 பேருமாக 9 பேர் உட்பட 50 பேருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டது.

No comments