கொரோனாவை வென்று வீடு திரும்பிய அரியாலை வாசிகள்

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் கண்காணிப்பில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் - அரியாலையை சேர்ந்த நால்வர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமே இவ்வாறு முழுமையாகச் சுகமடைந்த நிலையில் இன்று (19) வெலிகந்தை வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அம்புலன்ஸில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டு அவர்களின் வீடுகளில் இறக்கிவிடப்பட்டனர்.

பூம்புகாரைச் சேர்ந்த ஒருவரும் முள்ளியைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

No comments