கொரோனாவால் சாவடைந்த புலம்பெயர் உறவுகளுக்கு ஈழத்தில் உணர்வஞ்சலி!

வவுனியாவில் ஆயிரத்து நூறு நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த உலக மக்களுக்கும், குறிப்பாக புலம்பெயர் உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்கு தமது போராட்டப் பந்தலில் நேற்று 16.04.2020 வியாழக்கிழமை அன்று 1154 ஆவது நாளில், மெழுகுவர்த்திகள் ஏற்றி தமிழர் தாயக சங்கத்தினர்
அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இனப்படுகொலைக்கு உள்ளான ஏனைய உலகத் தேசிய இனங்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்த நாடுகளின் அனுசரணையுடன் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பான அரசியல் தீர்வாகிய தமிழர் தேசம் உருவாக உழைத்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் உறவுகள், அண்மைக்கால உலக கொள்ளை நோயான கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்து கொண்டிருப்பது தமிழர் தேசத்துக்கு பேரிழப்பு எனவும் தமிழர் தாயக சங்கத்தினர் கவலை தெரிவித்தனர்.

No comments