கொழும்பிலிருந்து வருகை தந்த நபர் அகப்பட்டார்?


கொழும்பிலிருந்து வருகை தந்த கொரேனா நோய் காவி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த பாரவூர்தியில் குறித்த நபர் யாழ்;ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதும் அவரது யாழ்.வதிவிட விபரங்கள் முன்னதாக அறியப்படவில்லை.

இதனிடையே வலி. மேற்கு பிரதேச செயலர்பிரிவில் தொல்புரம் கிழக்கு பகுதிக்கு கொழும்பு வாழைத்தோட்ட பகுதியில் இருந்து இளைஞர் ஒருவரே அவரென அடையாளங்காணப்பட்டுள்ளார்.

கொழும்பில் இப்பகுதி உயர் அபாயப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு புத்தக கடை ஒன்றில் வேலை செய்யும் இவர் கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்றில் எந்தவித அனுமதியும் இல்லாமல் பயணித்து தொல்புரம் பகுதிக்கு வந்து சேர்த்துள்ளார்.

இவரை பலாலியல் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதுவரை இவர் தங்கியிருந்த வீட்டிலேயே இப்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இவர் தங்கியிருக்கும் வீட்டுக்காரான இவரது சகோதரியின் குடும்பத்தினரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்கிருக்கும் வீடு இப்போது காவல்துறை பாதுகாப்புடன் முடக்கப்பட்டிருக்கிறது அல்லது முற்றுகைக்குள் உள்ளது.

இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கிராம அலுவலர் மற்றும் பொதுசுகாதாரப்பரிசோதகர் ஆகியோருடன் காவல்துறையும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் இவர் தொடர்பாக கொரோணா தடுப்பு சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments