முடக்க நிலையை மீறி இத்தாலியில் ஒன்றுகூடிய மக்கள்! மன்னிப்பு கேட்ட மேயர் மற்றும் மதகுரு!

இத்தாலியில் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள முடக்கநிலையை மீறி தென்கிழக்கு நகரமான சென் மார்கோவில் புனித வெள்ளி
பிரார்த்தனைகளில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

நடத்த இச்சம்பவத்திற்கு அந்நகரத்தின் மேயர் மன்னிப்புப் கோரியுள்ளார்.

புனித வெள்ளியை முன்னிட்டுப் பாரம்பரியமான சில சடங்குகள் இந்நகரில் நடைபெறுவது வழக்கம்.பழைய வாகனங்களுக்குள் பெரிய மரத் துண்டுகளைப் போட்டுக் கொளுத்துவது அத்தகைய சடங்குகளில் ஒன்று.

ஆனால் கொரேனாவினால் ஏற்பட்டுள்ள பேரழிவால் சடங்குகள் இவ்வாண்டு இரத்து செய்யப்பட்டிருந்தன.

அதற்குப் பதிலாக புனித வெள்ளிப் பிரார்த்தனையைக் காணொளியாக ஒளிபரப்ப கத்தோலிக்க மதகுரு திட்டமிட்டிருந்தார். ஆனால் முன்னறிவிப்பின்றி அவருடன் வழிபாட்டில் திரளான மக்கள் ஒன்று கூடிவிட்டனர்.

வழிபடும் வேளையில் அவர்களை அங்கிருந்து அனுப்ப மனமில்லாமற்போனதாகக் கூறிய மேயர், தம்முடைய தயக்கத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். பிரார்த்தனையை வழிநடத்திய சமய குருவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments