யாழில் ஒரு வாரமாக ஒன்றுமில்லை!


கடந்த ஒரு வாரமாக யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் புதிதாக ஒருவரும் அடையாளப்படுத்தப்படவில்லை.இருப்பினும் இன்றைய நாளிலும் வைத்தியசாலையிலும் வைத்தியசாலைக்கு வெளியே உள்ளவர்களிடமும் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுவதாக யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பரிசோதனையிலும் 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி.யாழ் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஒருவருக்கும் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் இருந்து ஒருவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கின்றவாறே எந்த ஒரு கொரோனா நோயாளிகளும் இனம் காணப்படாத நிலையில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 7 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்களில் முதலாவதாக இனங்காணப்பட்ட தாவடியை சேர்ந்த நோயாளி தற்போது உடல் நலம் தேறி வந்துள்ளதுடன் அவர் மிக விரைவில் வீடு திரும்ப உள்ளார் என்று கூறப்படுகின்றன.

மிகுதி நோயாளிகளும் அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.மேலும் கடந்த சில நாட்களாக எமது மாவட்டத்தில் எந்த ஒரு கொரோனா நோயாளிகளும் இனம் காணப்படவில்லை.இது நமக்கு ஒரு ஆரோக்கியமான விடயம்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையை போல இன்னும் சில தினங்களுக்கு இருக்குமாயின் மத்திய சுகாதார அமைச்சும் இலங்கை அரசாங்கமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று நம்புகின்றேன்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்;று 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் எவருக்கும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் சங்கானை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10ற்கும் இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்த ஒரு நோயாளிகளும் இனம் காணப்படவில்லை கடந்த சில நாட்களாக தொற்று உள்ளவர்கள் எவரும் இனம் கானப்படவில்லையென தெரிவித்துள்ளார்.

No comments