பாஸ் அனுமதியில் தாமதம்?


யாழில் விவசாயிகளுக்கு   பாஸ் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக கவலை தெரித்துள்ள
விவசாயிகள் அனைவருக்கும சமமான முறையில் பாஸ் வழங்கி தமது தொழில் செய்ய ஆவண செய்யுமாறு கோரியுள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் விவசாயிகள் தமது உற்பத்திப் பொருள்களை கொண்டு செல்வதற்கும் விவசாய காணிகளுக்கு செல்வதற்கு பாஸ் தேவைப்படுகிறது.

அதனால் பிரதேச செயலகத்தில் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தால் அசமந்தப் போக்காக அதனை வாங்கி வைத்துவிட்டு பிரதேச செயலர்கள் திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் தமக்கு தெரிந்தவர்களுக்கு பாஸ் வழங்குவதாகவும் தெரியாதவர்களை கண்டுகொள்வதில்லை என்றும் இதனால் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

குறி;ப்பாக கோப்பாய் பிரதேச விவசாயிகளுக்கு இந்தப் பாகுபாடு பெரிதும் காட்டப்பட்டு வருவதாக தெரிவிக்ப்படுகிறது.  அதாவது விவசாய பாரம்பரியத் தொழிலாக விளங்கிய இப் பிரதேசம்  இன்று விவசாயம் செய்வோர் குறைந்து  வரும் நிலையில் இப்படியான செயற்பாடுகளால் மேலும் விவசாயம் பின்நோக்கிச் செல்லும் என்பதில் ஐயப்பாடு இல்லை என்று விவசாயிகள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.

No comments