வரலாற்றில் எதிர்மறை விலைக்குச் (-37.63) சென்றது கச்சா எண்ணெய்

அமொிக்க வரலாற்றில் கச்சா எண்ணெய் விலை முதல் முதறையாக எதிர்மறை விலைக்குச் சென்றுள்ளது. பீப்பாய் (158.98 லிட்டர்) ஒன்று -37.63
டொலராக எதிர்மறை விலைக்குச் சென்றுள்ளது. இது உலக நாடுகளைச் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உலகெங்கும் எண்ணை மக்கள் முடக்க நிலையில் வாழ்வதால் போக்கு வரத்துக்கள் முடங்கியதால் எரிபொருளின் தேவை குறைந்துவிட்டது.

அமொிக்காவில் இன்று திங்கட்கிழமை காலை பங்குச் சந்தை ஆரம்பித்த பொழுதே கச்சாய் எண்ணெய்யின் விலை எதிர்மறை விலைக்குச் சென்றுவிட்டது.

அதாவது உற்பத்தியாளர்கள் கச்சா எண்ணெய்யை வாங்குபவர்களுக்கு பணம் கொடுத்து எண்ணெய்யை வைத்துக்கொள்ளுங்கள் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள முடக்கநிலை, கச்சாய் எண்ணெய்  உற்பத்தி அதிகரிப்பு, எரிபொருள் பாவனை குறைவடைந்தமை, உற்பத்தியான எரிபொருட்களை சேமிப்பதற்கு சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கொள்கலன்கள் போதாமை, எரிபொருள் வர்த்தகர்கள் எரிபொருளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாமை போன்ற காரணங்களால் இந் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

No comments