கொரோனா:மீண்டும் மதுபான நிலையங்கள் பூட்டு!அரசினது ஊரடங்கு விலக்கத்தையடுத்து திறக்கப்பட்டு கொண்டாடப்பட்ட அனைத்து மதுபான நிலையங்களையும் மீண்டும் இழுத்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடுமாறே, அரசாங்கம் அறிவித்துள்ளது. 

நேற்றைய தினம் ஊரடங்கு 18 மாவட்டங்களில் நீக்கப்பட்ட நிலையில் பெரும்குடி மக்கள் மதுபான நிலையங்களில் படையெடுத்து தமது தாகத்தை தீர்த்துக்கொண்டனர்.

ஆனாலும் இது கடும் விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையிலேயே அரசு இழுத்து மூடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.


No comments